Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்ற தேர்தலில் (TN Assembly Election 2021) அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் (Naam Tamilar Katchi) ஆகிய 5 கட்சிகள் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கையின் படி திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 


ALSO READ | Tamil Nadu Election Results 2021 Live: ஆரம்ப முதலே முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி


தற்போதைய நிலவரம்
திமுக (DMK) கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் அதிமுக (AIADMK) கூட்டணி 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பட்டியலில் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam), நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் வாக்கு நிலவரம் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது.


திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது 3வது இடத்தை மநீமவும், நாம் தமிழர் கட்சியும் போட்டா போட்டியிட்டு வருகின்றன. இதில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் - மநீம தலைவர் கமல்ஹாசன் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் 11 மணி நிலவரப்படி கமல்ஹாசன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR