Tamil Nadu Election Results 2021 Live: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 04:03 PM IST
Live Blog

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இம்முறை கொரோனா பரவல் அதிகமாக உ நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அதேசமயம் பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரிந்துவிடும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு (TN Assembly Election 2021) வழக்கமாக 20 சுற்றுக்கள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இம்முறை 44 சுற்றுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. 

ALSO READ: TN Elections 2021: வாக்கு எண்ணிக்கை; காவல் துறை கூறுவது என்ன

தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் திமுகவிற்கே சாதகமாக அமைந்துள்ளன. இதனால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

2 May, 2021

  • 15:15 PM

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

    மதியம் 3.15 மணி நிலவரப்படி, திமுக 149 தொகுதிகளில் முன்னிலை. அதிமுக 84 தொகுதிகளில் முன்னிலை.

  • 15:15 PM

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பின்னடைவு!

    தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1,166 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார் 

  • 14:30 PM

    காட்பாடி தொகுதி: திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை

    தமிழக சட்டமன்றத் தேர்தல்: சமீபத்திய தகவல்களி படி, காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், 55,177 வாக்குகள் பெற்று, 87 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வி.ராமு, 55,090 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  • 14:15 PM

    பொறுப்பாக இருங்கள்: மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

    "வாக்கு எண்ணிக்கை முடியும்வரை, முகவர்கள் வெளியே வரக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்"  என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  • 14:15 PM

    தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள்: தேர்தல் ஆணையம் கண்டிப்பு:

    தேர்தல் முன்னிலை விவரங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இதை வன்மையாகக் கண்டித்துள்ள தேர்தல் ஆணையம், தற்போது ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் உத்தரவை மீறி, தேர்தல் வெற்றிக்கான கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடுமாறும், இப்படி மக்கள் கூடி கொண்டாடும் பகுதிகளின் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

  • 14:15 PM

    கோவை வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் 21 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

  • 13:30 PM

    தொண்டர்களுக்கு திமுக தலைமை அறிவுரை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாட வீதியில் யாரும் திரள வேண்டாம். வீடுகளிலேயே வெற்றியை கொண்டாடுங்கள என கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

  • 13:15 PM

    முதல்வர் பழனிசாமி  தொடர்ந்து முன்னிலை!

    எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதல்வர் பழனிசாமி 51,113 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்!

  • 13:00 PM

    சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக முன்னிலை!

    சென்னை துறைமுகம் தொகுதியில் 6வது சுற்று முடிவில் 3385 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சேகர் பாபு தொடர்ந்து முன்னிலை. அதே தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பின்னடைவு.

  • 12:45 PM

    ராதாபுரம் தொகுதி நிலவரம்

    கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது வெற்றிக்காக நீதிமன்றம் படிகளில் ஏறி இறங்கிய திமுக வேட்பாளர் அப்பாவு, இந்தமுறை ராதாபுரம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்!

  • 12:45 PM

    குஷ்பு சுந்தர் பின்னடைவு: 

    சென்னை ஆயிரம் விளக்குகள் தொகுதியில் இருந்து திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் குஷ்பு சுந்தர் பின்னடைவு. 

  • 12:45 PM

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை: 

    கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

  • 12:00 PM

    சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக முன்னிலை!

    சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலை

  • 12:00 PM

    ஆவடி தொகுதி நிலவரம்: மா.பாண்டியராஜன் பின்னடைவு!

    அதிமுக வேட்பாளர் மா.பாண்டியராஜனை மிகவும் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட திமுக வேட்பாளர் நாசர் 17,159 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

  • 11:45 AM

    கோவை தெற்கு தொகுதி நிலவரம்: கமல்ஹாசன் முதலிடம்!

    கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 11,235 வாக்குகள் பெற்று முன்னிலை 
    இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளார். ஆனால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். 

  • 11:30 AM

    தமிழக தேர்தல் நிலவரம் - திமுக கொண்டாட்டம்!

    திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே வெற்றியை கொண்டாடுகிறார்கள்.

     

     

  • 11:30 AM

    தமிழக தேர்தல் நிலவரம்!

    சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. 

  • 11:15 AM

    தமிழக தேர்தல் நிலவரம் - ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை!

    போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றார் . 340 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

  • 11:15 AM

    தமிழக தேர்தல் நிலவரம் - உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 4ம் சுற்று முடிவில் 10,996 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.

  • 11:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவு

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி 4வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

  • 11:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் - கமல்ஹாசன் முன்னிலை!

    கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.

  • 11:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்!

    தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை..!!

  • 10:45 AM

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளம் நிலவரம்: 

    திமுக கூட்டணி 99
    அதிமுக கூட்டஞ்சி -87 
    மநீம - 1

  • 10:45 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் - ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு

    போடி தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்துத்துள்ளார்.

  • 10:30 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பின்னடைவு. அதிமுக வேட்பாளர் சொரத்துரார் ராஜேந்திரன் முன்னிலை.

  • 10:30 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம் (232/234)

    திமுக -130
    அதிமுக - 99
    மநீம-  01
    அமுமுக - 00
    நாதக - 00

  • 10:15 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு தொடர்ந்து முன்னிலை. அதே தொகுதியில் போட்டியிட அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 2 ஆம் இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

  • 10:15 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    இராயபுரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் பின்னடைவு

  • 10:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி 17,486 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் திமுக வேட்பாளரை விட 10,772 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் சம்பத்  6714  வாக்குகள் பெற்றுள்ளார். 

  • 09:45 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை. 

     

     

  • 09:15 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    தற்போது நிலவரப்படி காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா முன்னிலை

  • 09:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கோவில்பட்டியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

  • 09:00 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

  • 08:45 AM

    தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்:

    தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பக்கட்ட வாங்கு எண்ணிக்கை நிலவரப்படி, 
    திமுக கூட்டணி 16 இடங்களிலும், அதிமுக கூட்டணி 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  • 08:00 AM

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

    தமிழ்நாடு புதுச்சேரி அசாம் மேற்கு வங்கம் கேரளா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

  • 08:00 AM

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

  • 07:15 AM

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிந்துள்ளனர்

  • 06:45 AM

    சென்னையில் 3 மையங்கள் உள்பட 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

  • 06:15 AM

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரமப்பம்.

Trending News