தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


நாளை மட்டுமல்லாமல், மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரையிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 


ALSO READ: தொடர் மழையால் குட்டித் தீவாய் ஆன கன்னியாகுமரி: நிவாரணப் பணிகள் தீவிரம்


2 ஆம் தேதிக்கான வானிலையைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இது தவிர, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னல் அதிவேகக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. 


மழைக்கான (Rain) வானிலை கணிப்பு இந்த வகையில் இருக்கும் அதே நேரம், தமிழகத்தில் கோடை வெயில் தாக்கமும் இன்னும் குறைந்துவிடவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில், மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்கு அருகில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரியில் (Kanyakumari) மெதுவாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகமாக பெய்த மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்ததோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது. கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பல ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


ALSO READ: Cyclone Yaas: ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்தும் பாதிப்பு வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR