பேருந்தில் இருந்து கொட்டிய பண மழை - நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்.!
![பேருந்தில் இருந்து கொட்டிய பண மழை - நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்.! பேருந்தில் இருந்து கொட்டிய பண மழை - நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்.!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/06/03/230382-new-project-21.png?itok=KheRreuT)
Kerela Bus : கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பண மழை. நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்
கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், கீழே பணம் கிடைப்பது நிச்சயம் நடத்திருக்கும் என தோன்றுகிறது. சிறிய பணமோ, பெரிய பணமோ ஆனால் நிச்சயம் ஏதேனும் ஒரு ரூபாயையாவது கீழே கிடைத்திருக்கும்தானே. சாலைகளில் செல்லும்போது இதுமாதிரியான ‘லக்’ அடிப்பது அபூர்வம். அதுவும் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று நமக்கு முன்னே செல்லும் பேருந்தில் இருந்து பணமாக கொட்டினால் எப்படியிருக்கும். அந்தப் பணம் சாலையில் சிதறிக் கிடந்தால் ; அதை நம்மால் எடுக்க முடியும் என்றால்.!
மேலும் படிக்க | ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி - ஆர்பிஐ அதிரடி உத்தரவு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்தப் பேருந்தில் இருந்து திடீரென பணத் தாள்கள் பறந்து சாலையில் சிதறின. அப்போது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் முதலில் ஒருவர் வாகனத்தை நிறுத்திப் பார்த்த பிறகுதான் உண்மையிலேயே சாலை முழுவதும் பணமாக சிதறிக் கிடப்பது புரிய வந்தது.
உடனடியாக அவர் பணத்தைப் பொறுக்க ஆரம்பித்ததும், மற்றவர்களும் வேகவேகமாக பணத்தைப் பொறுங்க ஆரம்பித்தனர். சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் என பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேரள அரசு விரைவுப் பேருந்தில் இருந்த நடத்துனரின் பையில் இருந்து மொத்தப் பணமும் சிதறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15,000 ரூபாய் காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளது. சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | இனி GPay-ல் இந்த தொல்லை இருக்காது! பணம் அனுப்ப எளிய வழி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR