வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடந்தது. நேற்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் இந்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. நேற்று கரையை கடந்த தாழ்வு மண்டலம், தாழ்வு பக்தியாக வலு குறைந்துள்ளது. இது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


என்று, எங்கு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என காணலாம்:


20.11.2021: திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


21.11.2021: சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள்,புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் (Rain) பெய்யக்கூடும்.


22.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


23.11.2021, 24.11.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


ALSO READ:பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி! 


அடுத்து வரும் இரு நாட்களுக்கான முன்னறிவிப்பு : மழை அதிகரிக்க கூடும்.


சென்னையை (Chennai) பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


திருப்புவனம் (சிவகங்கை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7, புதுக்கோட்டை,  பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பந்தலூர் (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 6 , நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்),  திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 5, திருப்போரூர் (செங்கல்பட்டு) , ஆலங்காயம் (திருப்பத்தூர்) , அய்யம்பேட்டை  (தஞ்சாவூர்), பெரியார் (தேனீ), ஆம்பூர் (திருப்பத்தூர்)  தலா 4,  தம்மம்பட்டி (சேலம்) , குடியாத்தம் (வேலூர்) , ஆத்தூர் (சேலம்) , சங்கராபுரம்  (கள்ளக்குறிச்சி) , காட்பாடி (வேலூர்) , புலிப்பட்டி (மதுரை) , மஹாபலிபுரம் (செங்கல்பட்டு) , ஆரணி (திருவண்ணாமலை) , திருப்பத்தூர் மானாமதுரை  (சிவகங்கை ) , தாம்பரம் (செங்கல்பட்டு) , சத்தியபாமா பல்கலைக்கழககம்  (செங்கல்பட்டு) , ஈரோடு, மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) தலா  3.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.


மேலும் விவரங்களுக்கு:  imdchennai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். 


ALSO READ:இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR