Monsoon: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2021, 07:52 AM IST
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியில் கனமழை
  • வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டது IMD
  • அணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்
Monsoon: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை title=

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வட தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது தொடர்பாக அணைகளை நிர்வகிக்கும் அமைப்புகளுக்கு மத்திய நீர் ஆணையம் (Central Water Commission (CWC)) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் (Water Reservoirs) நிரம்பி வழிவதால், அணைகளை பராமரிக்கும் அதிகாரிகளுக்கு மத்திய நீர் ஆணையம் (CWC) அறிவுரை வழங்கியுள்ளது. அணையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும்,  அணையில் இருக்கும் மற்றும் வெளியேற்றும் தண்ணீரை கவனமாக கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, 2021 நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடற்கரையை கடந்ததாக வெள்ளிக்கிழமை காலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வட தமிழகக் கடற்கரையில் வியாழக்கிழமை காலை மணிக்கு 23 கிமீ வேகத்தில் நகர்ந்து சென்னையில் இருந்து 250 கிமீ, புதுச்சேரியில் இருந்து 220 கிமீ, காரைக்காலில் இருந்து 210 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

மேலும், தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்  வெள்ள அபாய எச்சரிக்கையும் (Chennai Rain)விடுத்துள்ளது. ராயலசீமாவின் தெற்குப் பகுதிகள், கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகள் மற்றும் வட தமிழ்நாடு மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள யேனம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பிரிவுகளில் சில நீர்நிலைகளில் 95-100 சதவிகிதம் தண்ணீர் நிரம்பியிருக்கின்றன. ராயலசீமா மற்றும் கேரளாவின் சில நீர்நிலைகளில் 80-85 சதவீதம் நீர் தேங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாக இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் இறந்தன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News