அடுத்த ஆண்டு ‘எம்.பில்’ பட்டம் நீக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு
பல்கலைக் கழகங்களிலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் ‘எம்.பில்.’ என்ற பட்டப் படிப்பு செல்லாததாக கருதப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பில். பட்டப் படிப்பு நிறுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
எம்.பில். பட்டப் படிப்பானது கடந்த 1977ம் ஆண்டு முதல் பல்கலை கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் எம்.எஸ்சி, எம்.ஏ போன்ற முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் எம்.பில். என்ற பட்டப் படிப்பை முடித்தால்தான் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுவர் என்ற தகுதி நிர்ணயம் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வந்தது.
முதுநிலைப் பட்டத்துக்கு பிறகு எம்.பில். பட்டம்பெற்றிருந்து ஆசிரியர் பணியில் இருப்போருக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டி வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் பணியமர்த்தும் முறையை மாற்றியமைத்த யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை தற்போது நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!
இதனால் எம்பில் பட்டம் ஆசிரியர் பணிக்கும் தேவையற்றதாக மாற்றியுள்ளது.
இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான பிஎச்டி முனைவர் பட்டத்திற்கு குறைந்த பட்ச தரம் மற்றும் விதிகளுக்கான ஒழுங்குமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு தனது இணைய தளத்தில் வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த கல்வி ஆண்டில் எம்பில் பட்டம் என்பது வழக்கத்தில் இருக்காது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியாகும் வரை பெறபட்ட எம்.பில் பட்டம் செல்லும் என்றும் தெரிகிறது.
கடந்த ஆண்டே சென்னைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படும் பல்கலைக் கழகங்கள் எம்.பில். பட்டப் படிப்பிற்கான சேர்க்கையை நிறுத்தி விட்டது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR