தற்போதைய இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி, மீண்டும் பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்துக்கு குடியேற வேண்டும் என சீமான் பேட்டியளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலோசனை கூட்டம்:


நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி தொடர்பான பல விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதையடுத்து, சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். \


“விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறது”


சீமான், கடலூரில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசுகையில், “விவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள். NLC அமைக்கிறார்கள். இது நல்லதா? விவசாயங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல. அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார்.” என்றார். மேலும், ”திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல்பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? அதிமுகவினர்கள் புனிதர்களா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை. அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும் ஆனால், சம்பவத்தன்று மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்?” என்றும் வினவினார். 


மேலும் படிக்க | ‘மாவீரன்’ திருட்டுக்கதையா..? இயக்குநர் மீது பாயும் சர்ச்சை…!


“திமுகவினர் பேசுவது புனிதமா?”


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள மணிப்பூர் கலவரம் குறித்தும் சீமான் பேசினார். அப்போது, “மணீப்பூர் கலவரம் பற்றி திமுகவினர் பேசுவது புனிதமா? குஜராத் கலவரத்தை நியாய படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போது எதிராக பேசுகின்றனர். தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கின்றார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி டாஸ்மாக் கடை என பெயர் வைக்கவில்லை?” என்று கேட்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “தமிழக மீன்வர்கள் கைது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளாரே என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் ஒரு போஸ்ட்மேன் தான். காங்கிரஸ், திமுகவினர் கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் பல திட்டங்களை தருவதாக தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் முன்னால் ips அதிகாரி பயிற்சியின் போது நடைப்பயற்சி போயிருப்பார்” என்று கூறினார்.


“தமிழகத்தில் தாமரை மலராது”


”தற்போது உடலை FIT ஆக வைத்துக்கொள்ள நினைத்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது. தண்ணீரில் தான் தாமரை மலரும் தமிழகத்தில் தாமரை மலராது என்றார். சந்திரயான் பற்றி மோடி பாராட்டி பேசிவருகின்றார். அங்கே குடியேர நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா? முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா? என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும்” என்று சீமான் பேசினார். 


“மோடி இந்தியாவை அழித்து விடுவார்”


பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? என்று கேள்வி கேட்ட சீமான், “ அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்” என்று கூறினார்.


மேலும் படிக்க | விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ