கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் கிராமத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்,வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மனு வழங்கி வந்துள்ளனர். தொடர்ந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கலியனூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு,வாக்காளர் அட்டையை ஒப்படைத்து, அலுவலர் திவ்யாவை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு செல்லும் டிடிவி தினகரன் - இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்..
பட்டா வழங்கும் வரை அலுவலகத்தை விட்டு வெளியே வர மாட்டோம் என தெரிவித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு விரைந்த குமாரபாளையம் வட்டாட்சியர் சண்முகவேல், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பட்டா கேட்கும் பொதுமக்கள் வசிக்கும் இடம் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் உடனடியாக பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு, உடனடியாக பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என வட்டாட்சியர் சண்முக வேல் உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ