Tamilaga Vetri Kalagam: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன் என்றும், படங்களில் நடிப்பதில் இருந்து விலக உள்ளேன் என்றும் தெரிவித்து இருந்தார். கட்சியின் அடுத்த பணியாக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22ம் தேதி வியாழன் அன்று நடைபெற்றது. விஜய் தன் கையால் 33 அடி உயர கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்தார். இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள 8 அணிகளின் தலைவர்கள் என 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது கொடி மற்றும் பாடல் அறிமுகமானத்தில் இருந்து சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | "யானை சின்னம் பயன்படுத்த உரிமை இல்லை” - கொடியை மாற்றுவாரா விஜய்?


விஜய் மீது புகார்


தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார், அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.



அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அரசியல்வாதி உத்தேவ் தாகரே தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக சட்டசபை தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அல்லது தேர்தல் சின்னமாக விலங்குகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறமானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று கூறியுள்ளது. அதன்படி, உயிருள்ள ஜீவன்களை மிருகம், பறவை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் விதிமுறை உள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடிகர் விஜய் செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை இல்லை என்றால் கண்டிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துளளார். 


மேலும் இந்த கொடி பெயின் நாட்டின் கொடி போல் உள்ளதாகவும் அந்நாட்டு தூதரகத்திற்கு இவர் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டு கொடியை தவறாக பயன்படுத்தினால் தேசிய குற்ற வழக்கு பதிவு செய்யலாம். அந்த அடிப்படையில் நடிகர் விஜய் மீது தேசிய குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்தியாவின் தூதரகத்திற்கும், ஸ்பெயின் நாட்டு தூதரகத்திற்கும் இமெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | கிருஷ்ணகிரி : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ