கடந்த ஆண்டு கொரோனா பரவலை அதிகரித்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் பங்கேற்று வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது கொரோனாவின் (Coronavirus) இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது.


ALSO READ | TN corona update District Wise ஆகஸ்ட் 23: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!


அதன்படி தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில் தற்போது கல்லூரிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி., 


* அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 
* அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். 
* தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை தயார் நிலையில் கல்லூரிகள் வைத்திருக்க வேண்டும்.
* கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும். 
* தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும். 
* மாற்றுத் திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. 
* கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். 
* விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். 
* சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். 
* கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும் என அந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ | செப்டம்பர் 2 ஆம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் பேரணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR