Gautham Vasudev Menon Case: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், போட்டான் கதாஸ் புரொடக்சன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராக 2011ஆம் ஆண்டு பதவி வகித்தார். ஆறு மாதங்களுக்கு பின் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், போட்டான் கதாஸ் நிறுவனம், 2013-14ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை உதவி ஆணையர் புகாரும் அளித்தார். 


மேலும் படிக்க | பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை!


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக கௌதம் மேனனும் சேர்க்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, எழும்பூர் நீதிமன்றம், அவருக்கு சம்மனும் அனுப்பியிருந்தது. அதில் ஒவ்வொருமுறையும் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவை ஏற்கப்பட்டு வந்தன.


அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்துள்ள வழக்கில், போட்டோன் கதாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தார்.


அந்த மனுவில், தனக்கும், போட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனக்கெதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனுக்கு விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.


மேலும் படிக்க | இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ