அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த `புதிய` சிக்கல்! - வேற ரூட் போடும் இ.பி.எஸ் தரப்பு!
திட்டமிட்டபடி வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
அதிமுகவில் தலைமைப் பஞ்சாயத்து தீர்ந்த பாடில்லை. பிரச்சனை நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்கிறது.
கட்சிக்கான ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்கவேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு ஓ.பி.எஸ் தரப்பு கடுமையான எதிர்வாதம் செய்துவருகிறது.
ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு தனித்தனியாகப் பிரிந்துகொண்டு, மாறி மாறி நோட்டீஸ் அடிப்பதும், சர்ச்சைக்குரிய வாசகங்களை அதில் இடம்பெறச் செய்வதுமாக கட்சியே கலவரக் காடாக காட்சியளிக்கிறது.
வருகிற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமைப் பொறுப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த, ஓ.பி.எஸ் தரப்பு சட்ட ரீதியாக இடையூறாக இருக்கும் எனவும் நீதிமன்றத்தில் தடை கோரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கூட்டத்தை நடத்த மற்றொரு புதிய சிக்கல் தற்போது முளைத்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அதிக நபர்களைக் கொண்டு கூட்டங்கள் நடத்தத் தடை உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்படும் பட்சத்தில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.
ஏற்கெனவே ஓ.பி.எஸ் தரப்பு சிக்கல் கொடுத்துவரும் நிலையில் கொரோனா சிக்கலும் எதிராக இருப்பதால் இ.பி.எஸ் தரப்பு மிகவும் அப்செட்டில் உள்ளதாம்.
ஆனால் கூட்டத்தை எப்படியும் நடத்தியே தீருவது என உறுதியாகவும் உள்ளனராம். அந்த வகையில், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில் வருகிற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டதை ஆன்லைனிலேயே நடத்தவும் இ.பி.எஸ் தரப்பு பரிசீலனையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | திருமணச் சான்று வாங்கப் போறீங்களா? - 'அந்த' ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR