ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான போட்டி தேர்வு அடுத்த வாரம் துவங்க உள்ளதாக செங்கோட்டையன் அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஈரோட்டில் புதிய பேருந்துகளின் சேவை துவக்க விழா மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு ஈரோட்டில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் செல்லும் 22 புதிய பேருந்துகளின் சேவையை துவக்கி வைத்தனர்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்; இந்தியாவிலேயே கூடுதலான பேருந்துகளை இயக்கும் வரலாற்றை படைத்து தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பான முறையில் இயங்கி வருவதாகவும், தமிழகத்தில் மட்டுமே சேவை மனப்பான்மையுடன் குறைவான கட்டணத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.


மேலும், 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பணிரென்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும்,
அரசு பள்ளி மாணவர்கள் எளிமையாக நீட் தேர்வில் பங்கேற்பதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.