கோவை கார் வெடிகுண்டு விபத்து: தொடரும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் அருகே கோட்டீஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காரில் உள்ள சிலிண்டர் வெடித்து சிதறியது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கானது என் ஐ ஏ க்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஆனது நடைபெற்று வருகிறது.
கோவையில் மட்டுமே 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ற வருகிறது. இதனை தொடர்ந்து மதுரையிலும் நடைபெற்று வருகிறது.
மதுரை ஹாஜிமார்தெரு பகுதியில் உள்ள வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத்(எ)முகமது அபுதாஹிர் என்பவரது வீட்டிற்கு என் ஐ ஏ அதிகாரிகள் நான்கு பேர் காலை 6 மணிக்கு சோதனை நடத்த வந்தனர். வீடு பூட்டியிருந்த நிலையில் ஜிகாத் அலியிடம் NIA அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது சகோதரரின் வீட்டில் இருப்பதாக தெரிவித்த நிலையில் காலை 7.30 மணிக்கு மேல் ஹாஜிமார் தெரு சாமியார் சந்தில் உள்ள வீட்டில் ஜிகாத் அலியிடம் சகோதரர் விட்டிற்கு சென்று ஜிகாத் அலியிடம் விசாரணை நடத்த் தொடங்கி தற்போது வரை 4 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவருக்கு கோவை வெடிகுண்டு விபத்து சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் சோதனை செய்து வருவதாகவும் இவரிடம் கோவை கார் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.இந்த திடீர் என்.ஐ ஏ சோதனை நகர் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
மேலும் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் அலிஜிகாத் முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரெட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
முன்னதாக, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, ஜமேசா முபீர் ஓட்டி வந்த கார், அதிகாலை 4:30 மணிக்கு வெடித்தது. போலிசார் நடத்திய விசாரணையில் இது சதி செயல் அரங்கேற்ற திட்டமிடப்பட்ட, கார் வெடிப்பு (கார் குண்டு வெடிப்பு) சம்பவம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
லும் படிக்க | கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு..! உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ