நீலகிரி : காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை உயிருடன் மீட்கும் பரபரப்பு காட்சி
Flood : கூடலூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், மண்குழி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை அவரது நண்பர்கள் உயிருடன் பத்திரமாக மீட்ட காட்சி
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக உதகை, கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக இன்று காலைய நிலவரப்படி கூடலூர் பகுதியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கூடலூர் பகுதியில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கூடலூர், நடுவட்டம், தேவாலா பந்தலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் கூடலூரில் உள்ள மண்குழி ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது.அப்போது பாலத்தில் நடந்து சென்ற மூன்று பேரில் மாணிக்கம் என்பவர் (வயது 53) காற்றாற்று வெள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது அவருடன் சென்ற சகநண்பர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நபரை பத்திரமாக மீட்டனர்.
கனமழை காரணமாக மண்குழி பாலம் அடித்து செல்லப்பட்டதால் கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் படிக்க | அருவிகளையே மூழ்கடித்தவாறு கரைபுரண்டு ஓடும் காவிரி - எச்சரிக்கை !
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை அதிகரிப்பின் பாதிப்பின் அளவும் எல்லை மீறி போகக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR