அருவிகளையே மூழ்கடித்தவாறு கரைபுரண்டு ஓடும் காவிரி - எச்சரிக்கை !

Cauvery Flood : கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு தண்டுரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை  

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 13, 2022, 12:38 PM IST
  • காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கை
  • கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்
  • விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்
அருவிகளையே மூழ்கடித்தவாறு கரைபுரண்டு ஓடும் காவிரி - எச்சரிக்கை ! title=

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில், இரு அணைகளில் இருந்தும் அதிக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1லட்சத்து 6 ஆயிரம் கன அடிநீர் வந்துகொண்டிருப்பதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

Cauvery River Flood warning

நீர்வரத்து அதிகரிப்பால் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, பரிசல் சவாரி செய்யவோ, கால்நடைகளை ஆற்றில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படும் என அறிவித்தார் .

Cauvery River Flood warning,ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேலும் படிக்க | அதிமுகவில் வெளியான பரபரப்பு ஆடியோ! பதறிபோய் விளக்கம் கொடுத்த பொன்னையன்!

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக விதிக்கப்பட்டது. மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் தண்டுரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து காவிரியாற்றில் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News