மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நித்யானந்தா - பிரசாதம் வாங்க முண்டியடித்த பக்தர்கள்!
கைலாசாவில் இருந்தவாறு உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் நித்யானந்தா பங்கேற்றார். அவரது ஆசிரமம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை வாங்க பக்தர்கள் முண்டியடித்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிரபல சாமியார் நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது ஜாமீனை ரத்து செய்துள்ள இந்திய நீதிமன்றங்கள் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு வாரண்டுகளை பிறப்பித்துள்ளன. அவரை பிடித்துக்கொண்டுவர சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டெர்போல் உதவி நாடப்பட்டுள்ள நிலையில் ‘ரெட் கார்னர்' நோட்டீஸ் எனப்படும் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் இருந்து வெளியேறிய நித்யானந்தா ஆஸ்திரேலியாவுக்கு அருகே "கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், ஐ.நா. சபையில் தனிநாடு அந்தஸ்து கோருவதாகவும் கூறுகிறார். அந்த நாட்டிற்கு வருவதற்கான வழியைச் சொல்லி, தனது தரிசனத்திற்காக பணமும் வசூல் செய்கிறார்.
புதிதாக அமைந்துள்ள கைலாசா நாட்டில் தங்கத்தால் ஆன கரன்சி மட்டுமே பயன்படுத்தப்படும். கைலாசாவுக்கும் 56 நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெறும் என பல்வேறு அசத்தலான அதிரடியான அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இதுமட்டும் இல்லை, வாடிகன் வங்கியை போன்றே கைலாசாவுக்கு என தனியாக ’ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா’ அமைக்கப்படும் என அறிவித்த அவர், கைலாசா நாட்டுக்கென சுமார் 300 பக்கங்கள் அடங்கிய பொருளாதார கொள்கையை உருவாக்கியுள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும் படிக்க | ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினேன்? – நித்யானந்தா விளக்கம்
இந்திய போலீஸாரால் மோஸ்ட் வாண்டட் கிரிமினல் என கருதப்படும் நித்யானந்தா உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்றது தான் தற்போதைய வைரல் செய்தி. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகலாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இதனிடையே தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள நித்யானந்தம் ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள், கைலாச நாட்டில் இருந்த வாறே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நித்தியானந்தாவுக்கு நேரலை வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்படி சித்திரை திருவிழாவை கண்டு ரசித்த நித்யானந்தா, தான் திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு சீடர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நித்யானந்தாவின் நேரலை தரிசனத்தை பொதுமக்களும் பார்த்தனர்.
மேலும், பக்தர்களுக்கு தனது ஆசிரம் சார்பில் பிரசாதங்களை வழங்க சீடர்களுக்கு நித்யானந்தா அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து நித்யானந்தா ஆசிரம் சார்பில் வழங்கப்படட் பிரசாதங்களை வாங்க பெண்கள், குழந்தைகள் உள்ப்ட ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு நேரலை மூலம் மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | போலி சாமியாரான நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை: ஈக்வேடார் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR