புதுடெல்லி: போலி சாமியாரான நித்யானந்தா ஈக்வேடார் நாட்டிக்கு சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, சொந்த நாட்டை அமைத்துள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சில நாட்களில், அது உண்மை இல்லை என்று அந்நாட்டின் நாட்டின் தூதரகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஈக்வேடார் நாடு நித்யானந்தாவுக்கு புகலிடம் வழங்கிய செய்தி உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது நாட்டில் எந்தவொரு நிலத்தையும் அல்லது எந்த தீவையும் வாங்குவதற்கு அரசாங்கம் நித்யானந்தா உதவ வில்லை. அவர் ஈக்வேடாரில் தஞ்சம் அடையவில்லை என்று ஈக்வேடார் அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, இன்று டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு ஈக்வடார் அரசு புகலிடம் வழங்கவில்லை. மேலும் ஈக்வடார் அருகே அல்லது தொலைவில் உள்ள தென் அமெரிக்காவில் எந்தவொரு நிலத்தையும் தீவையும் வாங்குவதற்கு ஈக்வடார் அரசாங்கத்தால் உதவப்படவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் தற்போது அவர் மறைமுகமாக இருக்கலாம். நாங்கள் அவருக்கு உதவி செய்யாததால் (அடைக்கலம்), அவர் ஹைதிக்கு சென்றிருக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
"இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும் கைலாசா.ஆர்ஜில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த வலைத்தளம் நித்யானந்தா அல்லது அவரது நிர்வாகிகளால் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படும் ஒரு வலைத்தளம் ஆகும். எனவே இனிமேல் கைலாசா.ஆர்ஜி (Kailaasa.org) என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஈக்வேடார் நாட்டை எந்த வடிவத்திலும் மேற்கோள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று ஈக்வடார் தூதரகம் கூறியுள்ளது.
அகமதாபாத்தில் கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் நித்யானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், அவரால் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படும் கைலாசா.ஆர்ஜ் (Kailaasa.org) என்ற வலைத்தளத்தில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா "கைலாசா" என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் தனது சொந்த நாட்டை "மிகப் பெரிய இந்து இறையாண்மை கொண்ட நாடு" எனவும், அதற்கு என சொந்தக் கொடி, அரசியலமைப்பு, சின்னம் மற்றும் சொந்த பாஸ்போர்ட் இருக்கும் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைப்பிடிக்கும் உரிமையை இழந்தனர் என நித்யானந்தாவின் வலைதளத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் கைலாசாவின் குடியுரிமைக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அவர்களின் வலைதளத்தில் கொள்கை பற்றியும் கூறியுள்ளது. அதாவது அடிப்படையில் "கைலாசா" நாடு பாலின சமத்துவம், புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டம், முழுமையான கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உலகளாவிய அணுகல், சைவ உணவு போன்ற காரணங்களை ஆதரிக்கிறது. கைலாசா ஆன்மீக, மத, சமூக, கலாச்சார, வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் சட்டபூர்வமான தன்மையை சனாதன இந்து தர்மத்தின் வழியில் பயணிக்கும். அதனால் அது மனிதகுலம் அனைவருக்கும் பயனளிக்கும்" என்று கைலாசா குறிப்பிட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.