நிவர் புயல்: சென்னையில் தயார் நிலையில் 77 நிவாரண மையங்கள், 2 சமூக சமையலறைகள்
நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்க கோபாலபுரம் (மண்டலம் 9) மற்றும் சிந்தத்திரிப்பேட்டை (மண்டலம் 6) ஆகிய இடங்களில் இரண்டு சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்த புயக் மேலும் வலுப்பெற்று இன்று இரவு கரையக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளிக் காற்றோடு புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க, நகரத்தில் சுமார் நூறு நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்படும் என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (Chennai Corporation) அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 15 மண்டலங்களில் உள்ள 77 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது ஐந்து நிவாரண மையங்கள் (Relief Centres) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்க கோபாலபுரம் (மண்டலம் 9) மற்றும் சிந்தத்திரிப்பேட்டை (மண்டலம் 6) ஆகிய இடங்களில் இரண்டு சமூக சமையலறைகள் (Community Kitchen) அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக சமையலறை ஒவ்வொன்றும் 1,500 பேருக்கு உணவு தயாரித்து பரிமாறும் திறன் கொண்டவை. தேவைப்பட்டால் இன்னும் இரண்டு சமூக சமையலறைகள் உருவாக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைத் தவிர, குடிமை அமைப்பு மற்றும் வருவாய் அதிகாரிகள் வீடற்ற மற்றும் ப்ளாட்பாரத்தில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு இந்த நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுபடி, அவர்களில் சிலர் நிவாரண மையங்களில் தங்குவதற்கு விருப்பமில்லை. சேரிகள் வசதி வாரிய வீடுகளில் தங்களுக்கென நிரந்தர வீட்டு வசதி வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இப்படிப்பட்ட கோரிக்கைகளை வைக்கும் மக்களை சமாதானப்படுத்தி நிவாரண மையங்களுக்கு அனுப்புவது அதிகாரிகளுக்கு கடினமான பணியாகத்தான் இருந்தது.
கடந்த ஆண்டு முதல், TNSCB நகரத்தில் குறைந்தது 2,000 நடைபாதை குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வீட்டுவசதி வழங்குவதாக உறுதியளித்து வருகிறது. இதில் இன்னும் எந்த வித முன்னேற்றமும் எற்படவில்லை.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர்களின் பல குடும்பங்கள், நகரின் வடக்கு பகுதிகளில் உள்ளன. மேலும் பலர் தற்போது தார்ச்சாலை தாள்கள், கடைகள் மற்றும் ஃப்ளைஓவர்களின் கீழ் தஞ்சம் கோருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, அவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி, மீனவர்களுடன் ஒருங்கிணைந்து, வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க, மோட்டார் படகுகளை (Motor Boats) தயார் நிலையில் வைத்திருக்கிறது.
ALSO READ: அதி தீவிர புயலாக உருவெடுத்த “நிவர்” இன்று இரவு கரையை கடக்கிறது..!
நிவர் சூறாவளி நவம்பர் 25 பின்மாலைப் பொழுதில் தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கில் 350 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ கிழக்கு-தென்கிழக்காகவும் இப்புயல் நகர்ந்துள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி (Puducherry) துறைமுகங்களில் பெரும் ஆபத்து சமிக்ஞை 'எண் 10' புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இந்த சமிக்ஞை கடுமையான சூறாவளி காரணமாக துறைமுகம் கடுமையான வானிலை அனுபவிக்கும் என்பதைக் குறிக்கிறது. புயல், துறைமுகத்திற்கு அருகில் அல்லது மிக அருகில் செல்ல வாய்ப்புள்ளது என்பதையும் இது குறிக்கிறது.
வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் கடற்கரையில் பலத்த மற்றும் தீவிரமான காற்றுடன் மழை பெய்யக்கூடும். இந்த கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடுகளும் சாலைகளும்
சேதமடையக்கூடும். மின் இணைப்புகளும் ரத்து செய்யப்படலாம். மின் கம்பிகள், பயிர்கள் மற்றும் மரங்களுக்கு சேதம் ஏற்படலாம் என IMD ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR