ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என உச்சநீதி மன்ற நிதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டுக்கு தடை:


பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 2017ஆம் ஆண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழ் நாடு அரசு மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததனால் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. 


பீட்டா வழக்கு:


தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கின் விசாரனை நடைப்பெற்று வந்தன. இதை, கே.எம் ஜோசஃப், அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தனர். இதுகுறித்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை..


ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை!


மேற்கூறிய வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை..’ என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடன் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைந்த பகுதி கலாச்சாரம் என்பது ஜல்லிக்கட்டு கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டின் உடைய பாரம்பரியங்களில் ஒன்றாக இருக்கக்கூடியது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


 ஜல்லிக்கட்டை அனுமதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்த  ஆவணங்கள் ஆதாரங்கள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டுக்கு எப்படி அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களோ அந்த அடிப்படையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் சட்டத்திருத்தங்களை கொண்டு வருவதற்கான வழிவகைகளையும் இந்த தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற விஷயத்தையும் கூறி இருக்கிறார்கள் 


கலாச்சாரத்துடன் ஒன்றியது...


கலாச்சாரத்துடன் ஒன்றிய விவகாரமாக ஜல்லிக்கட்டு பார்க்கப்பட்டாலும் கூட சில விஷயங்கள் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருப்பதாக அமர்வு குழு கூறியுள்ளனர். எனவே ஜல்லிக்கட்டு இனிமேல் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் அங்கம் என்பதை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசனம் அமர்வு கூறி இருக்கின்றார்கள் 


“ஜல்லிக்கட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட குழுக்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. அதற்கும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவே இதனை ஏற்கக்கூடாது என்பதாக பீட்டா அமைப்பு சொல்லியிருந்தார்கள். இதுதான் பீட்டா உள்ளீட்ட அமைப்பினுடைய அடிப்படையான வாதமாக இருந்தது”


 தமிழ்நாடு அரசின் ஆதாரங்கள் ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் மிக விலாவாரியாக சரி பார்த்தோம் அதில் இந்த ஜல்லிக்கட்டு என்பது எத்தனை ஆண்டுகளாக என்னென்ன வழிமுறைகள் எல்லாம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை எல்லாம் நாங்கள் மொத்தமாக பார்த்திருக்கிறோம் 


இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை வழங்கக்கூடிய ஆர்ட்டிகள் 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் தமிழக அரசின் சட்ட திருத்தம் இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். மாநில சட்டமன்றம் ஒரு விவகாரத்தில் சட்டம் ஏற்றுவதற்கான அதிகாரத்தை மீறும் வகையிலும் இந்த சட்ட திருத்தம் இல்லை என்பதாக நீதிபதிகள் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


கலாச்சாரத்தின் அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதை நீதிபதிகள் கூறி இருப்பதால், இந்த தீர்ப்பு மற்ற மாநில அரசுகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | உச்ச நீதிமன்றம் & கொலீஜியம் குறித்த சர்ச்சைக் கருத்து! கிரண் ரிஜுஜூ இலாகா மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ