அரியலூரில் இத்தனை அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களே இல்லையா? அதிர்ச்சி ரிப்போர்ட்
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 12 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களே இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
அரசுப் பள்ளிகள் மூலம் இலவசமாக கல்வி கற்பித்து பல தலைமுறைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்றது தமிழ்நாடு. இலவச பஸ் பாஸ், மதிய உணவு, சத்துணவு, உணவில் முட்டை, இலவச சைக்கிள், இலவச மடிக்கணிணி என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களால் பள்ளிக் கல்வித்துறை வலுவான அமைச்சகமாக அரசில் நீடிக்கிறது.
கொரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள், மனரீதியான விழிப்புணர்வு என பல திட்டங்களை அரசுப் பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. அதே சமயம் மற்றொருபுறம் அரசுப் பள்ளிகள் மீதான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!
அந்த குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலும் நிறையவே குறைகள் இருக்கின்றன. முறையான பராமரிப்பு இல்லாமை, சரியான பயிற்சி தராமை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது மற்றொன்று இணைந்திருக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்திருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டக்குழு, அரியலூர் மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று பதிலளித்திருக்கிறது. அரியலூர் மாதிரியான சிறிய மாவட்டத்திலேயே 12 பள்ளிகள் தலைமை ஆசிரியர் இன்றி இயங்கிவந்தால் தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் இந்த நிலை இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. பள்ளிக் கல்வித்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு காலியான இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க | களிமேடு விபத்து எதிரொலி: களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR