தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி வேட்பாளர்கள், சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஓட்டு எண்ணிக்கையின்போது விருதுநகர் லோக்சபா தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக மீண்டும் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். பாஜக சார்பில் ராதிகா களமிறங்கி இருந்தார். இதில் தொடக்கம் முதலயே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அவர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்றார். 


மேலும் படிக்க | ஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடி


தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோற்றுப்போனார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா 1,66,271 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு விஜயபிரபாகரனின் தாயும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரருமான பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‛‛விருதுநகரில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்தது. சூழ்ச்சி செய்து விஜயபிரபாகனை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டர் பிரஷர் தாங்க முடியாமல் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்யும் வகையில் தவறு நடந்துள்ளது. இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என்று கூறினார்.


அதோடு தேமுதிக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் விஜய பிரபாகரன் டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார். அதில், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், "விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. இது தொடர்பான உரிய ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.


இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் அதிகாரி ஒருவர், விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்றும், தேர்தல் ஆணையம் அதனை செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  விஜய பிரபாகரன் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் மட்டுமே தீர்வு தேடிக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | திமுக தனித்து நின்றிருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்காது: எடப்பாடி பழனிசாமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ