வடமாநிலத்தவர்களின் செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது -டிடிவி தினகரன்
North Indian Workers Attack TN Student: தமிழக மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நோக்கி வேலைவாய்ப்பிற்காக வந்த வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் வடமாநிலத்தவர்கள் பரவி விட்டனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு தினம்தோறும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ள நிலையில், அண்மைக் காலமாக தமிழர்களுக்கும், வடமாநிலத்தவருக்கும் மோதல்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திருப்பூரில் உள்ளா கம்பெனியில் தமிழர்களை வட மாநில இளைஞர்கள் அடித்துவிரட்டினர். நேற்று முன் தினம் கோவை சூலூரில் தனியார் கல்லூரி உணவகத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, வட மாநில இளைஞர்கள் உருட்டு கட்டையை கையில் எடுத்துக்கொண்டு கல்லூரியில் நடமாடியது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக ரயிலில் ரிசர்வேசன் பெட்டிகளில் டிக்கெட் எடுக்காமல் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளனர். ரயில்களில் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளாக இருந்தாலும் வடமாநிலத்தவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்கிற நிலை தற்போது அதிகரித்து வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து மிரட்டும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் வருகை கட்டுக்குள் வரவேண்டும், அவர்கள் கண்காணிக்க பட வேண்டும். எத்தனை பேர் வருகிறார்கள், கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், தொழில் செய்ய தான் வருகிறார்களா, கணக்கே இல்லாமல் அவர்கள் வருவது வன்முறைகளுக்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ