OMR Food Court Issue : சென்னையில் OMசாலையில் உள்ள OMR புட் கோர்ட் மிகவும் பிரபலமான உணவக வளாகம் ஆகும் . இதன் புதிய கிளையை குரோம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தொடங்க இருப்பதாக கூறி சென்னையில் உள்ள பல பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும். ஓஎம்ஆர் ஃபுட் கோர்ட் உரிமையாளர் ரஞ்சித் பாபா என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மோசடியில் சிக்கி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான சிராஜ் அவர்களும் பணத்தை இழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் புதிதாக கடை கட்டுவதாக கூறிய கும்பலை நம்பி கும்பகோணம் பில்டர் காபி என்ற கடை அமைக்க ரூபாய் 3 லட்சம் முன்பணமாக அளித்துள்ளார். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகிய நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல், கிணற்றில் போட்ட கல் போல இருந்ததால், அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், நஷ்டம் காரணமாக தற்போதைக்கு பணத்தை கொடுக்க முடியாது என பதில் கூறியுள்ளனர். 



இதனையடுத்து சிராஜ் அவர்கள் சென்னை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்க துரைப்பாக்கம் ஜே9 போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போது, இவருக்கு முன்பாக 50 பேர் இதே போல் புகார் அளித்திருப்பதை அறிந்து இவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 



இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.


ALSO READ | திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR