தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் மிக முக்கிய தலைவராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத் இப்போது சைலண்ட் மோடில் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் மட்டும் தான். தேனி மக்களவை தொகுதியில் தங்கள் குடும்பத்துடைய சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றார். இம்முறையும் அந்த போட்டியிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த அவர், டிடிவி தினகரனுடன் மீண்டும் ஐக்கியமானதால் அவருக்காக அந்த தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டார். தேர்தல் பிரச்சாரத்திலும் பெரிய அளவில் தலைக்காட்டவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா என நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம் புகழ் பாடிக் கொண்டிருந்த ஓபி ரவீந்திரநாத், பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ரவீந்திரநாத் பாஜகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இணையவில்லை. திமுவுக்கு செல்லவும் தயாராகவே இருந்தாராம். ஆனால், தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் முக்கிய புள்ளியாக இருப்பதால் அவரை சேர்த்துக் கொள்ள திமுக தலைமையிடம் இருந்து சிக்னல் வரவில்லையாம். அதனால் அந்த முயற்சியையும் அப்படியே விட்டுவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ரவீந்திரநாத் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருவேளை அதிமுகவிலேயே தொடர்ந்திருந்தால் இம்முறையும் தேனி தொகுதி எம்பிக்கு போட்டியிட்டிருப்பார். வெற்றி வாய்ப்புகூட கிடைத்திருக்கும். ஆனால், அவரின் அப்பா பன்னீர்செல்வம் எடுத்த சில முடிவுகள் ரவீந்திரநாத்தின் அரசியல் வாழ்க்கைக்கும் பின்னடைவாக அமைந்துவிட்டது. 


அடுத்தக்கட்டமாக அவர் என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை. ஏதாவதொரு கட்சியில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ரவீந்திரநாத்துக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால், அரசியல் களத்தில் இருந்து முழுவதும் காணாமல் போய்விடுவார். பாஜகவில் சேர ரவீந்திரநாத்துக்கு விருப்பம் இல்லையாம். திமுகவில் சேர முடியாது, அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி மனது வைத்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவுக்கு அவர் செல்ல முடியும். அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் புதிதாக ஒரு கட்சியில் தான் ரவீந்திரநாத் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். டிடிவி தினகரனின் அமமுகவில் சேரும் எண்ணம் இருந்திருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அக்கட்சியில் இணைந்து தேர்தலில் கூட போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை.


இதனால், விஜய் தொடங்கியிருக்கும் கட்சியில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசும்போது, விஜய் உடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியிருந்தார். ஒருவேளை விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாநாடு நடத்தும்போது, ரவீந்திரநாத் அக்கட்சியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம். அதனால் விஜய்யோடு சேர்ந்து இரண்டாவது அரசியல் இன்னிங்ஸை ரவீந்திரநாத் தொடங்கபோகிறாரா? என்பது இன்னும் 12 மாதங்களுக்குள் தெரிந்துவிடும். 


மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ