கடந்தாண்டு  ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.


வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது எனத் தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழுவை கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர். 


மேலும் படிக்க | ஈரோடு: இளங்கோவன் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம்; நாம் தமிழர் வாக்குகள் விவரம்


இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஜூலை 11இல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் முடிவை நீதிமன்றமே எடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.


இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான, பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், "கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் என்னை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்" எனவும் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று முடிவு காணப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தமிழக சட்டப்பேரவைக்குள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ