ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் காலமானார். அவருக்கு வயது 61.
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் காலமானார். அவருக்கு வயது 61.
பாலமுருகன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலைக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்தார். அப்போது 2018 ஜூலை 2 ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் அவசரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து, பாலமுருகன் ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சென்னையில் (Chennai) உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார். இதைத் தொடர்ந்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், பாலமுருகன், இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ALSO READ: சீமானின் அப்பா காலமானார், முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி
சகோதரரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பெரியகுளம் புறப்பட்டு சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஒ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். பாலமுருகன் அவர்களை இழந்து வாடும் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: கொரோனா நிவாரணப் பணிகளுக்காக திருமாவளவன் நிதி உதவி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR