DMK over AIADMK: ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு! காரணம்?

நாட்டில் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு, லாக்டவுன் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 11, 2021, 06:48 AM IST
  • ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு! காரணம்?
  • முன்னாள் முதலமைச்சர் மீது கொரோனா ஊரடங்கை மீறியதாக வழக்கு
  • ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதாகப் புகார்
DMK over AIADMK: ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு! காரணம்? title=

சென்னை: நாட்டில் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு, லாக்டவுன் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்புவரை பிறர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மீதும் இன்று கொரோனா ஊரடங்கை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read | இன்றைய ராசிபலன், 11 மே 2021: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுபச்செய்திகள் கிடைக்கும்

பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அதிமுக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்ய சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியது. அந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். 

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதாகப் புகார்கள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read | இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News