குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம்!

13 மளிகைப் பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பை அடுத்த மாதம் ஜூன் 3 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டம். 

Written by - ZEE Bureau | Edited by - Shiva Murugesan | Last Updated : May 13, 2021, 07:39 PM IST
  • 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு.
  • பல மாநிலங்களில் ஊரடங்கு (Corona Lockdown) விதிக்கப்பட்டு உள்ளது.
  • முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம்!

சென்னை: தமிழக அரசு சார்பில் ரேஷனில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு (Tamil Nadu Government) திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

உலகம் முழுவதும் இரண்டாவது கொரோனா (COVID-19) அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசடைந்துள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு (Corona Lockdown) விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பல நிவாரண சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. 

தமிழகத்திலும் குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card Holders) பயன்பெறும் வகையில் 13 வகை மளிகை பொருட்களை வழங்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் தரத் திட்டம் எனக் தகவல் வெளியாகி உள்ளது. 

ALSO READ |  குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 கொரோனா நிவாரணத் தொகை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

13 மளிகைப் பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரணத் தொகுப்பை (Covid Relief Fund) அடுத்த மாதம் ஜூன் 3 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டம் எனவும் கூறப்படுகிறது. ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

13 groceries free of cost in Tamil Nadu

கொரோனா நிவாரண தொகுப்பி‌ல் கோதுமை ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, ரவை ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுந்தம் பருப்பு அரை கிலோ, புளி கால் கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு 1, துணி துவைக்கும் சோப்பு 1 மற்றும் மிளகு சீரகம் உட்பட கிட்டத்தட்ட 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.  ஏற்கனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு  இரண்டாயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி (Corona Relief Fund) வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கடந்த 10 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். வரும் 15 ஆம் தேதி முதல் நிவாரண டோக்கன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News