அதிமுகவில் தலைமை பஞ்சாயத்து உச்சத்தில் இருந்துவருகிறது. ஒற்றைத் தலைமைதான் கட்சிக்குச் சரி எனவும் அந்த ஒற்றைத் தலைமையும் எடப்பாடி பழனிசாமிதான் எனவும் விடாப்பிடியாக இருக்கின்றனர் இ.பி.எஸ் ஆதரவாளர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் கட்சித் தலைமைப் பொறுப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு தனித்தனியாகப் பிரிந்து, மாறி மாறி நோட்டீஸ் அடிப்பதும், சர்ச்சைக்குரிய வாசகங்களை அதில் இடம்பெறச் செய்வதுமாக அதிமுகவுக்குள் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்துவருகிறது.


இதனால் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர்களுக்குக் கட்சி சார்பில் கையெழுத்து கூட போட்டுக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு தேர்தலைப் புறக்கணிக்க கூடிய சூழல் எழுந்துள்ளது.



இதற்கு நடுவே, பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு இன்று சென்னை வந்தார். கூட்டணிக் கட்சியினரிடம் தனக்காக ஆதரவையும் அவர் கோரினார். இந்த நிகழ்வு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள  ஓ.பி.எஸ் தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் வந்திருந்தனர்.


மேலும் படிக்க | திருமணச் சான்று வாங்கப் போறீங்களா? - 'அந்த' ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க!



 


அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருசேர மேடை ஏறாமல், தனித்தனியாக வந்து முர்முவுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே எவ்வித பேச்சும் இல்லை.


இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என அதிரடியாகத் தெரிவித்தார். அதிமுக கட்சியின் விதிகளின் படி இன்று வரை தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் அவர் தெரிவித்துச் சென்றார்.


மேலும் படிக்க | அன்று விஜயகாந்த்; இன்று கமல்! இடிக்கப்படுகிறதா ஆழ்வார்பேட்டை ஆபீஸ்? பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR