அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் அதிரடி நீக்கம், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கொண்டு வருவார் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசி இருந்தார். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கூறி வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நீக்க பட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தற்போது  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு


இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இதற்கு தொடர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  பொதுக்குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சீனியர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக பேசி வருகின்றனர்.  கட்டபொம்மன் பிறந்த இடத்தில் தான் எட்டபனும் பிறக்கிறார் என்று ஓபிஎஸ்-ஸை சாடி ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.  அதிமுகவுக்கு  ஓபிஎஸ் தேவையா? எதிர்கட்சியோடு சேர்ந்து இயக்கத்தை அழிக்க திட்டமிட்டார், கட்சிக்கு துரோகம் செய்தார், கட்சியை காட்டிக் கொடுத்தார் என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டி உள்ளார்.  



ஓ.பி.எஸ்-க்கு இன்னொரு கொடூர முகம் இருக்கிறது, அவருக்கு நடிகர் திலகம் என பட்டமே அளிக்கலாம் என நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார்.  எம்ஜிஆர், ஜெயலலிதா சினிமா மூலம் மக்கள் அன்பை பெற்றவர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி உழைப்பு ஆற்றல் மூலம் மக்கள் தலைவராகியுள்ளார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.  மேலும் ஓபிஎஸ்-க்கு வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லை எனவும் கூறியுள்ளார்.  காலை அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின் காரணமாக இன்னும் சற்று நேரத்தில் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை துணையோடு அதிமுக அலுவலகத்தில் உள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை பூட்டி சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | எட்டப்பன் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்: ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR