கோவை மாவட்டம் சிந்தாமணிபுதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரோஜினி, இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவத்தன்று காலை வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த பாலை நீண்ட நேரமாகியும் சரோஜினி எடுக்காததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தனர். 


அப்போது அவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாய் மற்றும் மூக்கு செல்லோ டேப் சுற்றப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்து. 


மேலும் படிக்க | SBI Alert: போலி செய்தியா, வங்கியின் செய்தியா என எப்படி கண்டுபிடிப்பது?


இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியின் மகன் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  


தடவியல் நிபுணர்களின் உதவியுடன் அங்கிருந்து கைரேகைகளை பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியை கட்டிப்போட்டு கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.  


இருப்பினும் 4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்திலும் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இருப்பினும், இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ