சென்னை : கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தற்போது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த உருமாறிய வைரஸ் பரவல் மேலும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  நேற்றைய தினத்தில் மட்டும் சுமார் 1489 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு


மற்ற இடங்களை காட்டிலும் சென்னையில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது, கிட்டத்தட்ட 92 பேர் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை போல் அல்லாமல், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.  இதன் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு விதித்த சில வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அமலுக்கு வந்தது.  அதில் முக்கியாயமாக மக்கள் பொழுதுபோக்க அதிகம் குவியும் மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறுகையில், மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரைக்கு இன்று முதல் அரசின் மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  போலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  இந்த தடையை மீறி மக்கள் கடற்கரைக்கு செல்லும் பட்சத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.  மேலும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கென உள்ள பாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் செல்வதற்கும், பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்படும் என்று கூறியுள்ளது.


கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒமிக்ரான் பரவலால் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டிசம்பர்-31ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை மெரினா உட்பட பல கடற்கரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Men Only: ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரம்பரிய அசைவ பந்தி திருவிழா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR