ஓமிக்ரான் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  16 வயது குழந்தை உட்பட அந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  எல்லோருக்குமே சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றாலும் தீவிர மருத்துவ கண்காணிப்பு துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Kerala HC: பிரதமரின் புகைப்படத்துடன் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் கொடுப்பது தவறா?


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன்  விளைவுதான் இப்போது இவ்வளவு பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.    உலக சுகாதார மையம் சொன்ன 11 நாடுகளில் இருந்து வரும் அத்தனை பேருக்குமே பரிசோதனை செய்து நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பி ஏழுநாள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கபடுகின்றனர்.  



டெல்ட வகை வைரஸை விட வேகமாக பரவி வருகிறது ஓமிக்ரான்.  இந்தியாவில் 9 மாநிலங்களில் 68 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே ஓமிக்ரான் வைரஸை முற்றிலும் தடுக்க முடியும்.  கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வரும் நாட்களில் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.  


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இந்த '5' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR