ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் காவேரி காலிங் என்னும் காவிரியை காக்கும்  இயக்கத்தை தொடங்கியது அனைவரும் அறிந்ததே. அதில்  மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரம் சார்ந்த விவசாயம் மூலம் உழவர் வருமானம் கணிசமாக உயரும். காவிரி கரையோரங்களில் மரங்கள் நடுவதால், பிராந்தியத்தில் மண்  வளமும் அதிகரிக்கும்.


இதன்விளைவாக, இந்த இயக்கத்தின் நடப்பாண்டில் மட்டும்  தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 84 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.


இந்நிலையில், கிராம மேம்பாடு மூலம் தான் நாடு முன்னேறும் எனக் கூறிய மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, காவேரி காலிங் என்னும்  காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.


தமிழகம் முழுவதும் 50 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது. சுமார் 285 ஏக்கர் விவசாய நிலங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர். குறைந்தபட்சம் 400 மரங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர்.


ALSO READ | COVID-19 Update: புதிய பாதிப்புகள் 86,821; மொத்த பாதிப்புகள் 63 லட்சத்தை தாண்டியது


தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை போன்ற விலை மதிப்புள்ள மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு சுற்றுச்சூழலும் மேம்படும்.


கடந்த மாதம் இதேபோன்ற ஒரு நிகழ்வில், மாநிலத்தில் பசுமையை அதிகரிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்நாட்டின் மரியாதைக்குரிய விவசாயிகளில் ஒருவரான ‘மரம்’ தங்கசாமியின்  நினைவு தினத்தை முன்னிட்டு, ஈஷா தன்னார்வலர்களுடன் விவசாயிகள் 1.26 லட்சம் மரக்கன்றுகளை நட்டனர்.


ALSO READ | தர்மயுத்தம் பார்ட்-2 தொடங்குகிறதா... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் சிக்கல்...?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR