பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர்கள் மூன்று பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பின் படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் சி.உஷாராணி, அரசுத்தேர்வுகள் இயக்கக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வசுந்தராதேவி ஓய்வு பெற்ற காரணத்தால் அந்தப் பதவிக்கு உஷாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் மு.பழனிச்சாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அதேவேளையில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் என்.லதா தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த இரு தினங்களா தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பணியிடமாற்றம் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியகி வருகிறது. அந்த வகையில் முன்னதாக சேலம் ஆட்சியர் ரோகிணி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களின் பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வெளியானது. 


இதனையடுத்து நேற்றைய தினம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி; புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் ஆகியோர் நியமனம் செய்து அறிவிப்பு ஆணை வெளயானது. தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர்கள் மூன்று பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.