ஸ்ரீரங்கம் கோயில்: Online Booking செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்!!
இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் முன்பதிவுகளை கோயில் இணையதளத்தில் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் (Purattasi Month) துவங்கவுள்ளது. புரட்டாசி என்றாலே அது பெருமாளின் மாதம். புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விசேஷமானவை. அவ்வகையில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களின் அலை மோதுவதைக் கண்டுள்ளோம்.
ஆனால், அனைத்தும் மாறிவிட்ட இந்த கொரோனா காலத்தில் வரும் புரட்டாசி மாதம் மாறுபட்டு இருக்கப்போகின்றது.
ஸ்ரீரங்கம் (Srirangam) ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
புரட்டாசி தமிழ் மாதத்தில் சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் (Shri Ranganathaswamy Temple) செல்ல விரும்பும் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு (Online Booking) செய்ய வேண்டும். மேலும் முன்பதிவுகளை கோயில் இணையதளத்தில் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19, 26 மற்றும் அக்டோபர் 3, 10 ஆகிய தேதிகளில் வரும் பூரட்டாசியின் நான்கு சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட வேண்டும். கோயில் வலைத்தளமான www.srirangam.org இல் முன்பதிவு செய்யலாம்.
கோயில் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி பி. ஜெயராமன் கூறுகையில், புராட்டாசியில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் இக்கோயிலுக்கு வருவது வழக்கம். COVID-19 நோய்த்தொற்று உள்ள இந்த நேரத்தில், பக்தர்களுக்கு இடையே தனி மனித இடைவெளியை (Social Distancing) பின்பற்றவும், தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பக்தர்கள் முன்பதிவு வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, நான்கு சனிக்கிழமைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்ய கோயிலுக்கு வருமாறு கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ALSO READ: TN School Reopening: விரைவில் வெளிவரவுள்ளன வழிகாட்டுதல்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR