நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் விடுமுறை, சமவெளிப் பகுதிகளின் நிலவும் வெயில் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து பூங்காவை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?



மலர் காட்சிக்கான தயார் பணிகள் தற்போது இருந்தே நடந்து வரும் நிலையில் பூந்தொட்டிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள் மலர் காட்சி திடலில் உள்ள மலர் தொட்டிகளையும், பூங்காவில் உள்ள பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை, இந்திய வரைபடம், இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர்.



இந்நிலையில் கடந்த ஞாயிறு முதல் இந்த ஞாயிறு வரை 85 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு களித்துள்ளனர். குறிப்பாக இன்று ஒரே நாளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது சுமார் 20,000 சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.


மேலும் படிக்க | ரோடு ஒன்னும் சரியில்லை.. வெளுத்து வாங்கிய தருமபுரி எம்பி செந்தில்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ