கந்துவட்டி கொடுமையால் தமிழக நடுதர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கந்துவட்டியால் பலர் தூக்கிட்டும், குடும்பத்தோடு தற்கொலை செய்யதும் உயிரிழந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் இது போன்ற வழக்குகள் குறைவதற்கு தமிழக அரசால் தீவிர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.


அந்த உத்தரவில்,


கந்துவட்டி கொடுமையை தடுக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் "அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003"ன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


1) கந்து வட்டி வசூல் செய்கின்ற மக்கள் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.


2) விசாரணை நடத்தி உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள்;


மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ


3) கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து வழக்கு தொடர்பாக கிடைக்கக்கூடிய வெற்று சார்பு குறிப்புகள், கையொப்பமிடப்பட்ட அல்லது வெற்று காசோலைகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட ஆவணங்கள்/மதிப்புமிக்க பத்திரங்கள் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக்கூடிய அனைத்து குற்றஞ்சாட்டு ஆவணங்களையும் கைப்பற்றுங்கள்.


4) இந்த சிறப்பு இயக்கத்திற்கு "ஆபரேஷன் கந்துவட்டி" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த இயக்கத்தின் கீழ் நல்ல விதமாக நடவடிக்கைகள் எடுத்து முன்மாதிரியாக பணியாற்றிய அதிகாரிகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவார்கள்.


இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR