கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக  ஆட்சி அமைத்தது. இதே நாளான மே 7ம் தேதி கொரோனா காரணமாக முதலமைச்சர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவியேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, இன்றோடு ஓராண்டைக் கடக்கிறது. இதையொட்டி திமுக அரசின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்து பாராட்டியும், விமர்சித்தும் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. ஓராண்டு சாதனையையொட்டி சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஓராண்டு திமுகவின் ஆட்சிக்கு மார்க் போட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காகிதப் புலியா சசிகலா? பொதுச்செயலாளராகும் இபிஎஸ்? அதிமுகவில் அடுத்த அதிரடி!


தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், அந்த விபத்தில் காயமடைந்தவர்களையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் ஓ.பி.எஸ் பேசியதாவது, ‘களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் பல பேருக்கு வீடு இல்லை. எனவே, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. அது, இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். மொத்தத்தில் இந்த ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியைச் சந்தித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். 


இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மேலும் படிக்க | சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்...சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR