OPS Vs EPS: ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரும் தற்போது ஓபிஎஸ் அணியால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இன்று மாலை அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆர்பி உதயகுமார்  காலங்காலமாக அதிமுகவில் இருந்த நிர்வாகி இல்லை. ஒரு விபத்தில் அதிமுகவிற்கு வந்து அதன்பிறகு, அம்மாவையும் சசிகலாவையும் ஏமாற்றி டாக்டர் வெங்கடேஷ் மூலமாக பதவியை பெற்று அமைச்சராக ஆனவர். அவர் தற்பொழுது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது ஆர்பி உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவை நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும் அவர் சிறையில் தான் இருப்பார். அவர் நாவடக்கத்துடன் பேசாவிட்டால் வெளியே நடமாட முடியாது என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், முதலில் இரட்டை தலைமை தான் வேண்டும் என துதி பாடியவர். அதன் பிறகு ஒற்றை தலைமை தான் வேண்டும் எனத் துதிபாட ஆரம்பித்தார். இவ்வாறு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரையும் பிடித்து மாறி மாறி பேசிக்கொண்டு வருகிறார். உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா எனத் தெரியவில்லை என்றார். 


மேலும் படிக்க: ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த அதிரடி மூவ் பலனளிக்குமா?


அம்மாவுக்கு கோவில் கட்டுகிறேன் என்று கூறி, உதயகுமார் வீட்டில் இறப்பவர்களை அங்கு கொண்டு வந்து புதைத்து அதனை சமாதியாக மாற்றி வருகிறார் தற்போது ஓபிஎஸ்யின் மகனை ராஜினாமா செய்ய கூறும் உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் அவர் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அங்கு நிற்க அவர் தயாரா என்றும் அவ்வாறு அங்கு நின்று அவர் ஜெயித்து விட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன் எனவும் சவால் விட்டார். 


பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ பற்றி கூறுகையில், அது எனது ஆடியோ இல்லை என்று பொன்னையன் கூறியதை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணமூர்த்தி, "அப்படி என்றால் மீண்டும் சில ஆடியோக்களை வெளியிடுகிறேன்" எனக் கூறினார்.


மேலும் படிக்க: அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ