சென்னை: கொரோனா நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த செய்தி என்னவென்றால், கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே "பாஸ்" என தமிழக அரசு (TN Govt) அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) அவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்தனர். அதுமட்டுமில்லாமல், பல மாவட்டங்களில், அடுத்த தேர்தலில் "எங்கள் ஓட்டு தமிழக முதல்வருக்கே" என போஸ்டர்கள் அடுத்து ஒட்டப்பட்டனர்.


ALSO READ |  Watch Video: MGR ஸ்டைலில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் தமிழக முதல்வர் EPS!!


ALSO READ |  தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார் எம். வீரலட்சுமி!!


அதேபோல தற்போது சென்னையில் (Chennai) ஒட்டப்பட்டு உள்ள ஒரு போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டர் தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பாக ஒட்டப்பட்டு உள்ளது. 


அந்த போஸ்டரில் "மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்" என்ற வாக்கியம் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டத்திலும் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) அறிவித்துள்ளார். மேலும் இறுதி பருவத்தேர்வு எப்பொழுது, எங்கு நடைபெறும் என்பது குறித்து அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ளார்.