தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார் எம். வீரலட்சுமி!!

நாட்டிலேயே முதன் முறையாக, அவசர கால மருத்துவ வாகனமான ஆம்புலன்ஸ் வண்டி ஓடுனராக ஒரு பெண் பணியமர்த்தப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 11:43 AM IST
  • தமிழகத்தில், முதலமைச்சர் கே பழனிசாமி புதிய அவசரகால சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • எம்.வீரலட்சுமி என்ற பெண் ஓட்டுனர் '108' ஆம்புலன்ஸில் ஒன்றின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.
  • 90 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 10 இரத்த சேகரிப்பு வாகனங்கள் புதிதாகப் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார் எம். வீரலட்சுமி!!  title=

சென்னை: நாட்டிலேயே முதன் முறையாக, ஆம்புலன்ஸ் வண்டி ஓடுனராக (Ambulance Driver) ஒரு பெண் பணியமர்த்தப்பட்டார். தமிழகத்தில், மாநிலத்தில் அவசரகால சேவைகளை (Emergency Services) வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர் கே பழனிசாமி (K Palanisamy) புதிய அவசரகால சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

எம்.வீரலட்சுமி (M Veeralakshmi) என்ற பெண் ஓட்டுனர் புதிதாக தொடங்கப்பட்ட '108' ஆம்புலன்ஸில் ஒன்றின் டிரைவராக நியமிக்கப்பட்டார். இது நாட்டில் முதல் முறையாக நடந்துள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தொண்ணூறு ஆம்புலன்ஸ்கள் (Ambulance), முகாம்களில் சேகரிக்கப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்வதற்காக 10 அரசு ரத்த வங்கிகளில் பயன்படுத்த 10 உயர் தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் கோவிட் எதிர்ப்பு பணிகளுக்காக ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல் குழு நன்கொடையளித்த 18 ஆம்புலன்ஸ்கள் ஆகியவை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன.

ALSO READ: புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை; புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும்: PMK

108 ஆம்புலன்ஸ் அவசர சேவைகளை மேலும் வலுப்படுத்த 500 புதிய ஆம்புலன்ஸ்கள் சுமார் 125 கோடி ரூபாய் செலவில் மாநிலத்திற்கு அர்ப்பணிக்கப்படும் என்று மார்ச் 24 அன்று திரு பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதைச் செயல்படுத்த, முதல் கட்டத்தில், 90 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 10 இரத்த சேகரிப்பு வாகனங்கள் முறையே 20.65 கோடி ரூபாய் மற்றும் 3.09 கோடி ரூபாய் செலவில் பெறப்பட்டுள்ளன.

பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் 138 பேருக்கு நியமனம் உத்தரவுகளை விநியோகிப்பதைக் குறிக்கும் வகையில் திரு பழனிசாமி அவர்களில் ஏழு பேருக்கு உத்தரவுகளை வழங்கினார்.

ALSO READ: ஆசியாவிலேயே முதன் முறையாக COVID நோயாளிக்கு நடந்த நுரையீரல் மாற்று சிகிச்சை: அட இங்கயா?

Trending News