சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த மீனவர்களான ஆண்டனி தாஸ் (52), அருள் தாஸ்(42), பாலமுருகன் (49), கருணாகரன் (54), காசிமேட்டை சேர்ந்த முருகன் (29), வியாசார்பாடியை சேர்ந்த ராஜன் (40) ஆகிய ஆறு பேர் குஜராத்திற்கு தொழிலாளியாக மீன்பிடிக்க சென்றனர். கடந்த மாதம் 18 ஆம் தேதி குஜராத்தில்  உள்ள கனட்ஸ் என்பவரின் விசைப்படகில் கூலி தொழிலாளியாக மீன் பிடிக்க சஞ்சய் என்பவருடன் இவர்கள் சென்றிருக்கின்றனர். அங்கு சென்ற ஆறு பேரும்  23 ஆம் தேதி போர்பந்தர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!


ஆனால் அவர்கள் சென்ற படகு இயந்திர கோளாறு காரணமாக திசைமாறி சென்றது. அதாவது, எல்லை தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளனர். இதனை கவனித்த பாகிஸ்தான் கடலோர காவல்படை அவர்களை பிடித்து கைது செய்தது. அந்த படகில் இருந்த மொத்தம் ஏழு பேரை கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் சென்னையில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களின் குடும்பத்துக்கு பேரிடியாக வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் இப்போது சோகத்தில் சிக்கியுள்ளது. அவர்களை மீட்க தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 



இது தொடர்பாக அருள்தாஸ் மனைவி தனபாக்கியம் கூறும் போது, மீன்பிடி தொழிலாளியாக குஜராத்திற்கு முதல்முறையாக சென்ற தனது கணவர்,  பாகிஸ்தானில் சிக்கி கொண்டார். சிக்கி கொள்ளும்போது வேறு ஓருவரின் தொலைபேசியில் இருந்து வாய்ஸ் ரெக்காட் அனுப்பிய பின்னரே தங்களுக்கு இது தெரியவந்ததாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தாங்கள் சிங்கார வேலர் மாளிகையிலும், எழிலகத்திலும் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஒருமாத காலமாக பாகிஸ்தானில் சிக்கி தவிக்கும் தங்கள் குடும்பத்தினரை எப்படியாவது உயிருடன் தமிழக முதலமைச்சர் காப்பாற்றி அழைத்து வர வேண்டூம் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ