பழனி கோவில் மற்றும் சுற்று பகுதிகளை புகையிலை குட்கா மற்றும் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  மேலும் பழனி கோவில் சுற்றி உள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  இந்நிலையில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்



ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம்  ஆக்கிரமப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.


அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக கோயில் இடங்களை 160 கடைகள் ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள இடங்களை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க 24 மணி நேரமும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிரிவல பாதைகளில் தற்காலிக ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு சாலைகளில் தடுப்புகள் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  கோயில் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்ற உத்தரன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது, மேலும் வருவாய்த்துறையினர் கிரிவலப் பாதையில் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் சிலருக்கு பட்டா கொடுத்துள்ளதை ரத்து செய்து அதனை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 


நீதிமன்ற உத்தரவை பின் பற்றும் வகையில் இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யாத அளவிற்கு நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறி உள்ளனர்.  ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், நீதிமன்ற உத்தரவிபடி தற்காலிக ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. பழனி கோவில் மற்றும் சுற்றுபகுதியை பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பழனி கோவில் சுற்றி உள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இனி வரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ