பழனி: மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியரின் மற்றுமொரு வழக்கு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழனி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் (POCSO act) கைது செய்யப்பட்டுள்ளார்.


பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக 30 வயதான நாட்ராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே திருமணமான இவர், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், அந்த சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகளை (Sexual Abuse) கூறி வந்திருக்கிறார். 


ALSO READ | திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை


மாணவியை திருமணம் செய்துக் கொள்வதாக கடந்த ஓராண்டாக சொல்லி வந்த ஆசிரியர், அவ்வப்போது மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, மாணவியின் தாயார் உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் நாட்ராயன் மீது புகார் அளித்துள்ளார். 


அதைத்தொடர்ந்து இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த போலீசார், உடனடியாக ஆசிரியரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் நாட்ராயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ஆசிரியர் நாட்ராயன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


READ ALSO | போக்சோ சட்டம் சொல்வது என்ன? குழந்தை உரிமைகள் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் விளக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR