தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவது வழக்கம். பள்ளி மோலண்மை குழு மறுகட்டமைப்பில் மாற்றங்களை செய்ய வேண்டுமானால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் மட்டும் போதாது. அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கருத்துக்களும் இதில் முக்கிய பங்காகும். இன்னும் சொல்லப்போனால், பள்ளி மேலாண்மைக்குழுவில் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களில் கூட தலையிடுவதற்கு பெற்றோர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்!
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் ஒருசில பள்ளிகளில் பெற்றோர்கள் வைத்த கோரிக்கைகளைத் தற்போது காணலாம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த பெற்றோர்கள், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேண்டுவாத்தியங்கள் முழுங்க பூங்கொடுத்து அளித்து வரவேற்றனர். சானமாவு என்றாலே யானைகள் நடமாட்டமுள்ள பகுதி என்பதால் இப்பள்ளிக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயக்கம் காட்டி வந்தனர். அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பள்ளி வளாகத்துக்குள் திடீரென யானைகள் புகுந்துவிடாமல் இருக்க சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதன் உயரம் போதவில்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். எனவே, பள்ளியைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் உயரத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர்கள் பெரும்பாலோனோர் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அச்சம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், தங்களது பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், இதனால் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் சூழல் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே பல பெண்களை அனுப்ப முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவதாகவும் பெற்றோர்கள் புலம்பினர். எனவே, தேவதானப்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆண்களுக்கென்று தனியாக பள்ளியை அமைத்துத் தர வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பள்ளியில் ஒருசில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டியது, அதனால் ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக் கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தலைமை ஆசிரியர் திட்டியதால் சத்துணவு பெண் அமைப்பாளர் தற்கொலை முயற்சி!
கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 203 அரசு பள்ளிகளிலும் இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீரநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். அவரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஸ்மார்ட் கிளாஸ் வசதி, கழிவறை வசதி, விளையாட்டுத் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை பெரும்பாலான பெற்றோர்கள் முன்வைத்தனர். பின்னர் பெற்றோர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களே சமூகத்துடன் இணைந்து வாழ கற்றுக் கொள்வதாகவும், அரசு பள்ளி மாணவர்களே பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டுவதாகவும் ஆட்சியர் சமீரன் பெருமைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாலின பாகுபாடற்ற சீருடையில் மாணவர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR