சில நாட்களுக்கு முன்னதாக, இந்தியாவின் கர்நாடகாவில் ஆடை கட்டுப்பாடு விவகாரம் தலைப்புச் செய்திகளில் இருந்தது. ஆனால் தற்போது சீருடை கட்டுப்பாடு குறித்து ஜப்பானில் இருந்து வந்துள்ள செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகள் போனிடெயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவிகளின் தலைமுடிக்கும், பள்ளிச் சீருடைக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா? மாணவிகளின் சிகையலங்காரத்தினால், பள்ளி நிர்வாகத்திற்கு என்ன பிரச்சனை?
இதற்கான காரணத்தையும் ஜப்பான் நாட்டு பள்ளிகள் கூறுகின்றான. ஆனால், அந்தக் காரணம் அதிர்ச்சியளிக்கிறது. ஜப்பானிய பள்ளிகள் மாணவிகளின் கழுத்தின் பின்பகுதியை பார்க்கும் மாணவர்களுக்கு பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுமாம்!
மேலும் படிக்க | "பள்ளியை விட ஹிஜாப் தான் முக்கியம்" மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை
ஜப்பான் பள்ளிகளின் மாணவிகள் மீதான சிகையலங்கார கட்டுப்பாடும், அதற்கான காரணமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாணவிகள், பெற்றோர் என பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்ப்பினாலும், இந்த விதி தற்போதைக்கு நீக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் ஜப்பானில் இதுபோன்ற விசித்திரமான விதிகள் அவ்வப்போது உருவாக்கப்பட்டன. வெகு காலத்திற்கு முன்பு, மாணவர்கள் வெள்ளை உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று சீருடைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
உள்ளாடைகள் வண்ணத்தில் இருந்தால், அது வெளியே தெரியுமாம்! எனவே வெள்ளை உள்ளாடைகளை அணிந்தால் அது, உள்ளாடையை வெளிப்படுத்தாது என்பதால், வெண்ணிற உள்ளாடையே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
அதேபோல, மாணவ-மாணவியரின் காலுறைகளின் நிறம், பாவாடையின் நீளம் மற்றும் அவர்களின் புருவங்களின் வடிவம் ஆகியவற்றில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய பள்ளிகளில் மாணவர்களின் தலைமுடிக்கு சாயம் பூசுவதற்கும் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR