கோழிக்கோடு: மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை களையும் வகையில் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது.
ALSO | கடும் எதிர்ப்பை அடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கம்!
கோழிக்கோடு மாவட்டத்தின், பாலுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் இந்த யுனிசெக்ஸ் சீருடை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 200 மாணவிகள் ஆண்களை போல மேல் சட்டையும், பேண்டும் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர்.
முதல்முறையாக இந்த செயல்முறையை 2018-ல் வலையஞ்சிரங்காராவில் உள்ள LP பள்ளி ஒன்றில் தான் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், "இந்த சீருடை மாற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். பெற்றோர்-ஆசிரியர் சங்கமும் இந்த முடிவிற்கு வரவேற்பு தந்தனர். மேலும் இது மாணவிகளுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார்.
ALSO READ | ஒமிக்ரானை வெல்லும் பூஸ்டர் டோஸ் தயாரிக்கும் பணியில் SII: ஆதார் பூனாவல்லா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR